இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்சை ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்சை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஒத்துழைப்பு போன்ற தலைப்புகளில் விவாதம் செய்தனர். ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில் இருதரப்பு பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசித்தோம் என்று கூறியுள்ளார்.
அவருக்கு இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் ராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தவிட்சக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மற்றும் தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.