தில்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியில், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயிற்சி மையத்தில் இருந்த 61 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
தீ விபத்து நேர்ந்ததும், உடனடியாக மாணவ மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மூன்றாம் மாடியின் ஜன்னல் வழியாக, வயர் மூலம் வெளியேறினர். நல்வாய்ப்பாக உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதில், ஊழியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணவர்கள் வீடு திரும்பி உள்ளனர். தீவிர காயம் ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.