டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி திடீரென ராஜினாமா செய்தார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்த் சிங் லவ்லி ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களிடம் கருத்து கேட்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியில் 4 இல் ஆம் ஆத்மி ,3 ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.