ரக்ஷா பந்தனை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

August 30, 2023

டெல்லியில் ரக்ஷாபந்தனை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை 106 முறை கூடுதலாக இன்று இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பணியாளர்களும் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர கூடுதல் காத்திருப்பு ரயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.. […]

டெல்லியில் ரக்ஷாபந்தனை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை 106 முறை கூடுதலாக இன்று இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டெல்லி மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பணியாளர்களும் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர கூடுதல் காத்திருப்பு ரயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.. மேலும் கியூ ஆர் கோடு முறையிலான டிக்கெட்களை வாங்கவும் டி.எம். ஆர்.சி டிராவல்ஸ் மொபைல் செயலியை பயன்படுத்த பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் காவலர்கள் வாடிக்கையாளர் வசதி முகவர்கள் மக்களின் தேவைக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu