ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 3 நாட்கள் விமான சேவை ரத்து

August 28, 2023

புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பார்கள் என்பதால், 3 நாட்களும் டெல்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக பாலிகா பஜார் ஆகிய பகுதிகள் 3 நாட்களுக்கு மூடப்படும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 விமானங்கள் புறப்படுகின்றன. […]

புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பார்கள் என்பதால், 3 நாட்களும் டெல்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக பாலிகா பஜார் ஆகிய பகுதிகள் 3 நாட்களுக்கு மூடப்படும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 விமானங்கள் புறப்படுகின்றன. அதுபோல 80 விமானங்கள் வருகின்றன. இந்த 160 விமானங்களையும் 3 நாட்களுக்கு ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து இடையூறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu