பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் நிறுவனத்தில் 6000 பேர் நீக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெல் நிறுவனத்தின் கணினி விற்பனையில் மந்த நிலை காணப்படுகிறது. நிறுவனத்தின் காலாண்டு வருவாயிலும் 11% வீழ்ச்சி பதிவானது. மேலும், டெல் நிறுவனம் செலவுகளை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பிப்ரவரி மாதத்தில் 126000 ஊழியர்கள் இருந்தனர். இது தற்போது 120000 ஆக குறைத்து குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதவி உயர்வு ஆகியவை கிடையாது என டெல் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.