உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் உதவுகின்றன. அதன் பெயரில், எஃப்16 விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, நெதர்லாந்து சென்றிருந்தார். அங்கு, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், அமெரிக்கா தயாரித்துள்ள எஃப் 16 போர் விமானங்களை உக்ரைனுக்கு அளிப்பதாக உறுதி மொழி வழங்கி உள்ளார். இதற்கு ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதே வேளையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், எஃப் 16 விமானங்களை புத்தாண்டுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த வகை போர் விமானங்கள், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு மிகவும் துணையாக இருக்கும் என கருதப்படுகிறது. இவை 2025 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட உள்ளன. கிட்டத்தட்ட 19 விமானங்களை வழங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.