அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும், தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ் ஷா வெற்றி பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லார்கோ பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளின் ஸ்பெல்லிங் பீ போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார். மேலும், 2019 ஆம் ஆண்டில் 51 ஆம் இடமும், 2021 ஆம் ஆண்டில் 76 ஆம் இடமும் பிடித்திருந்தார். தொடர்ந்து பயிற்சிகள் மற்றும் முயற்சிகள் செய்து, 2023 ல் வெற்றி பெற்றுள்ளார்.
போட்டியின் இறுதி அல்லது 15 வது சுற்றில், psammophile என்ற சொல்லின் ஸ்பெல்லிங் கேட்கப்பட்டது. இது மண்ணில் உயிர் வாழும் ஒரு வகை உயிரினத்தின் பெயராகும். இதனை சரியாக உச்சரித்து தேவ் ஷா வெற்றி பெற்றுள்ளார்.