கர்நாடக முதல்வருக்கு எதிராக சட்டப்பேரவையில் தர்ணா

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையா விற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை மைசூர் நகர மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. பின்னர் அவரது மனைவி பார்வதியின் விருப்பப்படி மைசூர் விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் அவரிடம் கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது. மேலும் இதனால் 3000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் […]

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையா விற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை மைசூர் நகர மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. பின்னர் அவரது மனைவி பார்வதியின் விருப்பப்படி மைசூர் விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் அவரிடம் கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது. மேலும் இதனால் 3000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார். அதனை கண்டித்து நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு பேரவைக்கு வந்து இரவு அங்கே தங்கி தர்ணா போராட்டத்தை தொடங்கினர். மேலும் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கோரியும், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரியும் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அவர்களிடம் சட்ட அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தர்ணாவை கைவிட கோரிய நிலையில் அதனை ஏற்க மறுத்தவர்கள் அவையிலேயே தங்கி விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu