தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு டிஜிட்டல் முறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு (2023-2024) இந்த மதுக்கடைகளின் மூலம் ரூ.45 ஆயிரம் கோடியேடு அரசுக்கு வருவாய் கிடைத்தது. ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு மது விற்பனை குறைந்து, டாஸ்மாக் நிறுவனமும் நஷ்டத்தில் செயல்படத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், மதுப் பிரியர்களுக்கு மேலும் நன்மைகளை வழங்க டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய முறையின் மூலம், மது பாட்டில்களுக்கு QR குறியீடுகளை ஒட்டி, அதன் ஒட்டுமொத்த பயணம் மற்றும் விற்பனைப் பணிகளை கண்காணிக்க முடியும். முதற்கட்டமாக, கோவை வடக்கு மற்றும் வடசென்னை பகுதிகளில் உள்ள 266 கடைகளில் இந்த டிஜிட்டல் முறையை தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.