ஆம்னி பேருந்து கட்டணம் 30 சதவீதமாக குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்களின் பொழுது சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 16,000 மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோண மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் பயணிக்க ஒன்பதாம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்து மட்டும் இன்றி இதர பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தவிர்க்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டணம் நிர்ணயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தபட்டு 30% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.