ஆழ்கடலில் ஏலியன் போன்ற புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

ஏலியன்கள் போன்ற தோற்றத்தில் புதிய உயிரினம் ஒன்று ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ மற்றும் ஹவாய் ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் கடல் பகுதியில், புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் 11,480 முதல் 18,045 அடிகள் ஆழத்தில் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனை கடல் குக்கும்பர் என்று வகைப்படுத்தியுள்ளனர். Unicumber என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் காணப்படும் இயற்கை குப்பைகளை உண்டு, இந்த வகை உயிரினங்கள் உயிர் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை கடல் […]

ஏலியன்கள் போன்ற தோற்றத்தில் புதிய உயிரினம் ஒன்று ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ மற்றும் ஹவாய் ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் கடல் பகுதியில், புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் 11,480 முதல் 18,045 அடிகள் ஆழத்தில் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனை கடல் குக்கும்பர் என்று வகைப்படுத்தியுள்ளனர். Unicumber என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் காணப்படும் இயற்கை குப்பைகளை உண்டு, இந்த வகை உயிரினங்கள் உயிர் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை கடல் பகுதியை சுத்திகரிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வகை உயிரினம் பார்ப்பதற்கு ஏலியன்கள் போல உள்ளது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த உயிரினத்தோடு சேர்த்து, கடல் பன்றி என்று அழைக்கப்படும் மற்றொரு உயிரினமும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu