நெல்லூர் அருகே விஜயநகர தங்க காசுகள் கண்டெடுப்பு

August 24, 2023

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே 450-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் சித்தேப்பள்ளி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மலையில் பாறாங்கல் அடியில் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் விஜயநகர அரசின் 450-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்துள்ளன. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில் புதையலில் 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள்,தங்க காசுகள் கிடைத்துள்ளன. இவை விஜயநகர மன்னர்கள் I மற்றும் […]

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே 450-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் சித்தேப்பள்ளி கிராமத்தில் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மலையில் பாறாங்கல் அடியில் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் விஜயநகர அரசின் 450-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்துள்ளன. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில் புதையலில் 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள்,தங்க காசுகள் கிடைத்துள்ளன. இவை விஜயநகர மன்னர்கள் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானவை. இவற்றில் விளிம்பு பகுதியில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. அக்காலங்களில் முறையான வங்கி முறை இல்லாததால் மக்கள் பணத்தை கோவில்களில் சேமித்து வைத்தனர். இது இன்னும் ஆந்திர மாநில தொல்லியல் துறையினரால் கைப்பற்றப்படவில்லை. இந்த நாணயங்களை பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu