தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இதற்கிடையில் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சஞ்சீவ் குமார் திவாரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், டி.ஒய்.சந்திரசூட்டின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். மேலும் இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.