தபால் ஓட்டு போட விருப்ப மனு வினியோகம் தொடக்கம்

March 20, 2024

பாராளுமன்ற தேர்தலில் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அதில் நேரடியாக வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் இரண்டாவது பிரிவிலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மூன்றாவது பிரிவிலும் உள்ளனர். இதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் தங்கள் வீட்டிலேயே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

பாராளுமன்ற தேர்தலில் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அதில் நேரடியாக வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் இரண்டாவது பிரிவிலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மூன்றாவது பிரிவிலும் உள்ளனர். இதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் தங்கள் வீட்டிலேயே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்பப்படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த படிவமானது இன்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் சென்று வழங்குகிறார்கள். வீட்டிலிருந்து வாக்களிக்க சம்மதம் தெரிவித்து விருப்பப்படுவதில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று செல்ல இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu