திமுக விருப்பமுனு தாக்கல் நிறைவு

திமுக சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவகளின் விண்ணப்பங்கள் கடந்த 1ம் தேதி முதல் பெறப்பட்டது. திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு கடந்த 1ம் தேதியிலிருந்து அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வந்தன. இதனை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரைமுருகன் காஜா மற்றும் ஆஸ்டின் ஆகியோர் பெற்று வந்தனர். இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் […]

திமுக சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவகளின் விண்ணப்பங்கள் கடந்த 1ம் தேதி முதல் பெறப்பட்டது.

திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு கடந்த 1ம் தேதியிலிருந்து அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வந்தன. இதனை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரைமுருகன் காஜா மற்றும் ஆஸ்டின் ஆகியோர் பெற்று வந்தனர். இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோன்று பல்வேறு தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் பலரிடம் இருந்து பெறப்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமான கட்சி பிரமுகர்கள் ஆதரவளர்களுடன் வந்து விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதுவரை 40 பாராளுமன்ற தொகுதிக்கு சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu