அட்லாண்டா சிறையில் டொனால்டு டிரம்ப் சரணடைந்தார்

August 25, 2023

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றார். தோல்வி முடிவை மாற்றி அமைக்க முயற்சி செய்ததாக கூறி இவர் மீது ஜார்ஜியா உள்ளிட்ட பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது சம்பந்தமான வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றம் இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து […]

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அட்லாண்டா சிறையில் சரணடைந்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றார். தோல்வி முடிவை மாற்றி அமைக்க முயற்சி செய்ததாக கூறி இவர் மீது ஜார்ஜியா உள்ளிட்ட பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது சம்பந்தமான வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றம் இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து அவர் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அப்போது சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக் கொண்டனர். பின்னர் அவர் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்தியதால் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டவுடன் அவர் விமான மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளா.ர் எனவே வழக்கு தொடர்பான இடையூறு ஏற்படக்கூடாது என்று சரணடைந்து ஜாமீன் பெற்றார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu