தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் அதிகம் உள்ளன - புதிய ஆய்வில் தகவல்

January 12, 2024

அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 2.4 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்குள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரில் கலந்துள்ளது அறியப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்ட நவீன ஆராய்ச்சியில், நானோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் […]

அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிட்டத்தட்ட 2.4 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்குள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரில் கலந்துள்ளது அறியப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்ட நவீன ஆராய்ச்சியில், நானோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் அதிக எண்ணிக்கையில் தண்ணீரில் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தண்ணீரை அருந்துவதால் மனித உடலில் பாதிப்புகள் நேரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் தவிர, பிளாஸ்டிக் உணவு பைகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் உள்ள உணவுப் பொருட்கள் மூலமாகவும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலுக்குள் செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu