ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
நேற்று இரவு ரஷ்யா - உக்ரைன் எல்லையில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் சில குறிப்பிட்ட பகுதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், வான் பாதுகாப்பு முறைகளில் 75 ட்ரோன்களை அழித்ததாக கூறியுள்ளது. மேலும் ரோஸ்டவ் பிராந்தியத்தில் மட்டும் 36 ட்ரோன்கள் அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த விளக்கம் இன்னும் சரியாக அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆய்த கிடங்குகள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.