பட்ஜெட் தாக்கலின் போது சுங்க வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 2200 குறைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் 2024- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூபாய் 2200 குறைந்து ஒரு சவரன் 52,400 க்கும், கிராமுக்கு ரூபாய் 275 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 6550 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வெளி விலை கிராமுக்கு 3.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 92.50 ஆகவும், கிலோவிற்கு ரூபாய் 3100 குறைந்து பார்வெள்ளி ரூபாய் 92,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.