தனியார் இ சேவை மையங்கள் எண்ணிக்கை - 20000 ஆக உயர்த்த திட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சேவைகளை பொதுமக்களுக்கு எளிமையாக கொண்டு சேர்க்க இ சேவை மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட 235 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனிநபர் அல்லது தனியார் இ சேவை மையங்களின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 9700 பொது இ சேவை மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக மின் ஆளுமை முகமை இயக்ககம், தமிழக அரசு கேபிள் […]

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சேவைகளை பொதுமக்களுக்கு எளிமையாக கொண்டு சேர்க்க இ சேவை மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட 235 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனிநபர் அல்லது தனியார் இ சேவை மையங்களின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 9700 பொது இ சேவை மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக மின் ஆளுமை முகமை இயக்ககம், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், எல்காட், வேளாண் கூட்டுறவு கடன் மையம் ஆகியவை, சில தொழில் முனைவோர்களுடன் இணைந்து, இந்த மையங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், ‘அனைவருக்கும் இ சேவை’ திட்டத்தின் கீழ், தனியார் இ சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், இந்த திட்டத்தின் கீழ் இ சேவை மையங்கள் அமைக்க, 16395 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள், மேலும் 3605 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://tnega.tn.gov.in/ என்ற அரசு இணையதளத்தில், இ சேவை மையங்களை தொடங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu