சூரிய குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள நெப்டியூன் கிரகத்துக்கு அருகே, பூமியைப் போலவே மற்றொரு கிரகம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழக விஞ்ஞானி பெட்ரிக் சோபியா லைகாகா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானி தகாஷி இட்டோ ஆகியோர் இது தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நெப்டியூன் கிரகத்துக்கு அடுத்ததாக, கைப்பர் பட்டை என்ற பகுதி உள்ளது. இது பனி போன்ற பொருட்களை அதிகமாக கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள பல குறுங்கோள்களில், தண்ணீர், அமோனியா மற்றும் மீத்தேன் ஆகியவை உள்ளன. அதன்படி, பூமி போன்ற மற்றொரு கிரகம் அங்கு நிச்சயமாக இருக்கும் என அவர்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறிப்பிடும் அந்த கிரகம், சூரியனிலிருந்து சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் புதிய கிரகம் குறித்த ஆய்வு பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.