பிஜி தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.
பிஜி தீவுகளுக்கு தெற்கே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 188 கிமீ ஆழத்தில் இருந்தது. இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும் அமெரிக்க மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.