பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் இன்று மதியம் 12.58 மணியளவில் 5.8 ரிக்கர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள நில அதிர்வுகளாக உணரப்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கம் பூமியின் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுவரை எந்தவொரு சேதங்களும் அறிக்கையிடப்படவில்லை.