பிலிப்பைன்ஸில் 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்சின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. மிண்டனாவ் தீவின் கிழக்கு பகுதியில் பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ரிங் ஆப் பயர்' எனப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது.