எதிர்ப்புறமாக சுழலும் பூமியின் மையப்பகுதி - விஞ்ஞானிகள் தகவல்

பூமியின் உட்புறத்தில் உள்ள மையப்பகுதி சுழலும் வேகம் குறைந்து வந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, பூமியின் மையப்பகுதி மெல்ல மெல்ல எதிர்ப்புறமாக திரும்பி சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி திடமான உலோகங்களால் ஆனது. கிட்டத்தட்ட நிலவின் அளவில் 70% அளவில், உலோக பந்து போன்ற அமைப்பில் இது உள்ளது. கடந்த நூற்றாண்டு முதல் இந்த மையப்பகுதி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 12-ம் தேதி, நேச்சர் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், […]

பூமியின் உட்புறத்தில் உள்ள மையப்பகுதி சுழலும் வேகம் குறைந்து வந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, பூமியின் மையப்பகுதி மெல்ல மெல்ல எதிர்ப்புறமாக திரும்பி சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் மையப்பகுதி திடமான உலோகங்களால் ஆனது. கிட்டத்தட்ட நிலவின் அளவில் 70% அளவில், உலோக பந்து போன்ற அமைப்பில் இது உள்ளது. கடந்த நூற்றாண்டு முதல் இந்த மையப்பகுதி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 12-ம் தேதி, நேச்சர் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பூமியின் மையப்பகுதியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதாகவும், சுழற்சி திசை எதிர்ப்புறமாக திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கங்களை அளவிடுவதற்கு உதவும் கருவிகள் வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu