இன்று மாலை தூத்துக்குடி மற்றும் நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

March 26, 2024

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதன் முதல் பிரச்சாரம் […]

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதன் முதல் பிரச்சாரம் திருச்சியில் தொடங்கியது. அதன்படி இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து விவிடி சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். அதன்படி நான்கு மணி அளவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை சென்று வாகையடி முனையில் வைத்து நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி புறப்படுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu