நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து 530 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்ந்தது.
முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 143 ரூபாயாக உயர்ந்தது.