வாக்காளர்களுக்கு புதிய முறையில் தேர்தல் விழிப்புணர்வு

March 22, 2024

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் கமிஷன் பொது தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்க செய்வதில் ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளை கையாள்கிறது. இந்த பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக 8 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை, விண்ணப்ப படிவங்களின் விவரங்கள், வாக்காளர் […]

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய தேர்தல் கமிஷன் பொது தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்க செய்வதில் ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளை கையாள்கிறது. இந்த பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக 8 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை, விண்ணப்ப படிவங்களின் விவரங்கள், வாக்காளர் பட்டியில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை வாக்குச்சாவடி இருக்கும் இடத்தை அறியும் முறை ஆகிய பல வழிகாட்டுதல்களை அச்சிட்டு வழங்குகிறது. மேலும் இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள வழிகாட்டி சேவை செயலிகள் பற்றிய விவரங்கள், வீட்டிலிருந்து வாக்களிக்கும் தபால் ஓட்டு வசதி, உறுதியாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி போன்ற தகவல்களும் அடங்குகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu