மத்திய மந்திரி ஷோபாவின் பேச்சு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததையோடு தேர்தல் நடத்த விதிகளை மீறி பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.