ராஜஸ்தான் - 100 யூனிட் மின்சாரம் இலவசம் - 200 யூனிட் வரை நிவாரணம் அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில், அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வீடுகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் இரண்டுக்குமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 100 முதல் 200 யூனிட் வரை உள்ள மின் கட்டணங்களுக்கு, அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, நிலையான கட்டணம், எரிபொருள் […]

ராஜஸ்தான் மாநிலத்தில், அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வீடுகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் இரண்டுக்குமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 100 முதல் 200 யூனிட் வரை உள்ள மின் கட்டணங்களுக்கு, அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, நிலையான கட்டணம், எரிபொருள் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களில் தள்ளுபடிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், 200 யூனிட் மின்சாரத்திற்கு தற்போதைய 1610 ரூபாய்க்கு பதில் 503 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். இதனால், ராஜஸ்தான் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu