மழை காரணமாக தமிழகத்தில் மின் நுகர்வு 1000 மெகாவாட் குறைந்தது

April 29, 2023

பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தமிழகத்தில் மின் நுகர்வு 1000 மெகாவாட் குறைந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது. இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை […]

பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தமிழகத்தில் மின் நுகர்வு 1000 மெகாவாட் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது. இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு குறைந்து வருகிறது. இது தவிர கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளது. 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்து இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu