ஆப்டிமஸ் ஹியூமனாய்டு ரோபோவின் யோகா வீடியோவை வெளியிட்டார் எலான் மஸ்க்

September 25, 2023

ஆப்டிமஸ் என்ற ஹியூமனாய்டு ரோபோவை எலான் மஸ்க் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ரோபோவின் வீடியோ ஒன்றை இன்று எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நமஸ்தே’ என்ற குறிப்புடன் ஆப்டிமஸ் ரோபோ யோகா செய்வது போன்ற வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்தியர்கள் மத்தியில் இந்த வீடியோ பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்டிமஸ் ஹியூமனாய்டு ரோபோ, தானாகவே கை மற்றும் […]

ஆப்டிமஸ் என்ற ஹியூமனாய்டு ரோபோவை எலான் மஸ்க் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ரோபோவின் வீடியோ ஒன்றை இன்று எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘நமஸ்தே’ என்ற குறிப்புடன் ஆப்டிமஸ் ரோபோ யோகா செய்வது போன்ற வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்தியர்கள் மத்தியில் இந்த வீடியோ பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்டிமஸ் ஹியூமனாய்டு ரோபோ, தானாகவே கை மற்றும் கால்களை அசைப்பது போன்ற செயல்களை செய்யும் திறன் கொண்டதாக உள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பார்வை திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உடல் அசைவுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu