அமெரிக்க பாதுகாப்பு அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 22 மில்லியன் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3.58 பில்லியன் டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ள டெஸ்லா நிறுவனப் பங்குகளின் மதிப்பு 40 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
நடப்பு ஆண்டில், மிகவும் மோசமான சரிவை எதிர் கொண்ட பங்குச் சந்தை நிறுவனமாக டெஸ்லா உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டரில் அதிக கவனம் செலுத்தி வருவதால், இந்த நிறுவனத்தின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்து எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.