ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 8 திட்டம் - சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறக்கும் வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் க்ரூ 8 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு ஃபுளோரிடாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் க்ரு 8 திட்டத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் 16 மணி நேர விண்வெளி பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எட்டாவது […]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் க்ரூ 8 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு ஃபுளோரிடாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் க்ரு 8 திட்டத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் 16 மணி நேர விண்வெளி பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எட்டாவது மிக நீள விண்வெளி பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே ஏவப்படுவதாக இருந்த ராக்கெட் மோசமான வானிலை காரணமாக நேற்று இரவு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை விண்வெளிக்கு சென்றுள்ள வீரர்கள், ஆகஸ்ட் மாத இறுதிவரை அங்கு தங்கியிருந்து 250 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu