தி மேன் நிறுவனம், ஆண்களுக்கான ஆடம்பர, உடல் பராமரிப்பு சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறது. தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. அத்துடன், வலுவான ஆன்லைன் இருப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், தி மேன் நிறுவனத்தின் 100% பங்குகளை இமாமி லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட ₹1,200-1,500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.