உருகுவே நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை - அவசரநிலை பிரகடனம்

June 22, 2023

தென் அமெரிக்க நாடான உருகுவேயில் வரலாறு காணாத வறட்சி பதிவாகியுள்ளது. மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உருகுவே அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அவசர நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், “கடந்த 7 மாதங்களாக உருகுவே நாட்டில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய அணைக்கட்டுகளில் நீர் வற்றியுள்ளது. அத்துடன், அடுத்த சில வாரங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை […]

தென் அமெரிக்க நாடான உருகுவேயில் வரலாறு காணாத வறட்சி பதிவாகியுள்ளது. மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உருகுவே அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அவசர நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், “கடந்த 7 மாதங்களாக உருகுவே நாட்டில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய அணைக்கட்டுகளில் நீர் வற்றியுள்ளது. அத்துடன், அடுத்த சில வாரங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதனை சமாளிக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. உருகுவே நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முதல் தட்டு நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு 2 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். குடிநீர் பாட்டில்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள சாங் ஜோஸ் ஆற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu