சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என 10 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே குடியிருக்கும் கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழில் அதிபர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதேபோன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அப்புறம் அரசு ஒப்பந்த அதிகாரி ஒருவர் வீட்டிலும் அமலாக்க துறை […]

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என 10 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே குடியிருக்கும் கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழில் அதிபர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதேபோன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அப்புறம் அரசு ஒப்பந்த அதிகாரி ஒருவர் வீட்டிலும் அமலாக்க துறை துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதேபோன்று இவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இவை தவிர தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழிலதிபர் வீட்டிலும் சென்னையில் சோதனை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று சென்னையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu