இலங்கைக்கு ஐரோப்பிய பார்வையாளர்கள் வருகை

August 31, 2024

இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழு அந்த நாட்டுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பு திட்டம் (EU EOM) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தேர்தல் நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்த 10 நிபுணர்கள் மற்றும் 26 நீண்டகால தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையின் 9 மாகாணங்களில் பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் 21-ஆம் தேதி […]

இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழு அந்த நாட்டுக்கு வந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பு திட்டம் (EU EOM) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தேர்தல் நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்த 10 நிபுணர்கள் மற்றும் 26 நீண்டகால தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையின் 9 மாகாணங்களில் பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 38 பேர் போட்டியிடுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu