ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் உதவி

March 21, 2024

ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள தங்கள் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு வழங்குவது என்பது திருட்டு செயலுக்கு சமம் என்று ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா போரில் உக்ரைனுக்கு மேகத்திய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. அவர்கள் நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பா முடக்கி வைத்துள்ள ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரைனுக்கு நிதி உதவியாக அளிக்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் போரில் பரிந்துரைத்தார். இது குறித்து ரஷ்ய அரசின் […]

ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள தங்கள் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு வழங்குவது என்பது திருட்டு செயலுக்கு சமம் என்று ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா போரில் உக்ரைனுக்கு மேகத்திய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. அவர்கள் நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பா முடக்கி வைத்துள்ள ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரைனுக்கு நிதி உதவியாக அளிக்கும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் போரில் பரிந்துரைத்தார்.

இது குறித்து ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் நேற்று கூறியதாவது, ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா முதலீடு செய்துள்ள சொத்துக்களில் இருந்து கிடைக்கப்பெறும் 90% வருவாயை உக்ரைனுக்கு அளிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிடுகிறது. இந்த செயல் திருடுவதற்கு ஒப்பாகும். இந்த திட்டம் செயல்பட்டால் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்து விடும். இது அந்நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக உக்ரைனுக்கு நிதி அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu