யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன இப்போட்டியின் பரிசுத்தொகை சுமார் 3,000 கோடி ஆகும் இதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் என ஆறு பிரிவுகளாக பிரித்து லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்படி அரையிறுதி சுற்றில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. அதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது