ஐரோப்பா: 2020 ல், காற்று மாசால் 2.38 லட்ச அகால மரணங்கள் ஏற்பட்டுள்ளன

November 26, 2022

காற்று மாசு காரணமாக, 2020 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 2.38 லட்ச அகால மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 96% நகரவாசிகள், அளவுக்கு மீறிய மாசுப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உலகச் சுகாதார மையம் நிர்ணயித்துள்ள அளவைத் தாண்டி காற்று மாசு உள்ளதால், தீவிர நோய்கள் ஏற்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே இறப்புகள் நேருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, வாகனங்களின் மூலம் வெளியேற்றப்படும் 2.5 […]

காற்று மாசு காரணமாக, 2020 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 2.38 லட்ச அகால மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 96% நகரவாசிகள், அளவுக்கு மீறிய மாசுப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உலகச் சுகாதார மையம் நிர்ணயித்துள்ள அளவைத் தாண்டி காற்று மாசு உள்ளதால், தீவிர நோய்கள் ஏற்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே இறப்புகள் நேருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, வாகனங்களின் மூலம் வெளியேற்றப்படும் 2.5 பி எம் அளவிலான நுண்ணிய மாசுப் பொருட்களை சுவாசிப்பதால், மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா, காசநோய் மற்றும் பிற நுரையீரல் வியாதிகள் ஏற்படுகின்றன.

இந்த அமைப்பின் அறிக்கை படி, சுமார் 49000 மரணங்கள் நைட்ரஜன் டை ஆக்சைடு மாசால் ஏற்பட்டுள்ளன. ஓசோனால் 24000 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இறப்பு விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் 45% குறைக்கப்பட்டுள்ளது. எனவே, நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் பட்சத்தில், 2030க்குள் 55% குறைக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2050 ல் காற்று மாசால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையை உருவாக்க இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu