முன்னாள் நீதிபதி எஸ்.மணி குமார் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

முன்னாள் நீதிபதி எஸ். மணி குமார் அவர்கள் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கவர்னர் ஆர். என் ரவி தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். மணி குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 70 வயது வரை இவர் இந்த பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2006 முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

முன்னாள் நீதிபதி எஸ். மணி குமார் அவர்கள் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கவர்னர் ஆர். என் ரவி தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். மணி குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 70 வயது வரை இவர் இந்த பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2006 முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu