பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

January 12, 2024

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என இருவரையும் கடந்த 2016 ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பு […]

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என இருவரையும் கடந்த 2016 ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் ஐம்பது லட்சம் அபராதம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனிடையே இவர் சிறையில் சரணடைய விலக்கு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. இவர்கள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu