மாஸ்டர்கார்டு இந்தியப் பிரிவு சேர்மனாக எஸ் பி ஐ முன்னாள் தலைவர் ரஜினிஷ்குமார் நியமனம்

September 15, 2023

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சேர்மன் ஆக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜினிஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரெடிட் கார்டு நிறுவனம் மாஸ்டர்கார்டு ஆகும். இந்த நிறுவனத்தின் தெற்காசிய செயற்குழு தலைமை பொறுப்பு ரஜினிஷ்குமார் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆசியா பசிபிக் தலைவர் ஆரி சர்க்கர், "இந்திய வங்கித் துறையில் ரஜினிஷ்குமார் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார். அவரது தலைமையின் கீழ், இந்தியாவின் டிஜிட்டல் கட்டண […]

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சேர்மன் ஆக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜினிஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரெடிட் கார்டு நிறுவனம் மாஸ்டர்கார்டு ஆகும். இந்த நிறுவனத்தின் தெற்காசிய செயற்குழு தலைமை பொறுப்பு ரஜினிஷ்குமார் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆசியா பசிபிக் தலைவர் ஆரி சர்க்கர், "இந்திய வங்கித் துறையில் ரஜினிஷ்குமார் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார். அவரது தலைமையின் கீழ், இந்தியாவின் டிஜிட்டல் கட்டண மற்றும் இதர வங்கித் துறை சார்ந்த நடவடிக்கைகளில் மாஸ்டர்கார்டு நிறுவனம் முக்கிய வளர்ச்சியை எட்டும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் எஸ்பிஐ வங்கியில் தனது பங்களிப்பை வழங்கிய ரஜினிஷ்குமார், தற்போது, ஹெச்எஸ்பிசி, பாரத் பே போன்ற பல்வேறு நிதித் துறை சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தற்போது, புதிதாக மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu