சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது சொத்துக்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் கடந்த 6,7 தேதிகள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இதற்கு உரிமை கோரி ஜெ. தீபா ஜெ.தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தது. அதனை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து கர்நாடகா ஐகோர்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான விசாரணையின் போது தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை 26ஆம் தேதி நடைபெறும் என ஒத்திவைத்தார். அதன்படி நேற்று நடைபெற்ற வழக்கின் போது கர்நாடகா தரப்பில் ஜெ.தீபாவின் மனுவிற்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் பொருட்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.