ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

March 26, 2024

சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் தொடரில் 7 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 7 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகின்றன. இதை ஒட்டி இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதா சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை […]

சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் தொடரில் 7 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 7 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகின்றன. இதை ஒட்டி இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதா சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்டம் இருப்பதால் தொலைதொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும் அதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயண சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும் இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu