மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் நீட்டிப்பு

August 26, 2023

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாரர்கள் சிறப்பு பெயர் மாற்றும் முகாம் தொடங்கப்பட்டது . இது மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைத்திட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மின் கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க வேண்டும் என அறிவித்தார். அதன் பெயரில் நாடு முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கு […]

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாரர்கள் சிறப்பு பெயர் மாற்றும் முகாம் தொடங்கப்பட்டது . இது மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைத்திட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மின் கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க வேண்டும் என அறிவித்தார். அதன் பெயரில் நாடு முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் வரை சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடங்கி வைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 2,68,995 வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றதனால் கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும் மேலும் ஒரு மாதத்திற்கு (செப்டம்பர் 25ஆம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மின் இணைப்புகளில் தங்கள் பெயரை மாற்றி கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu