இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட 297 பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்கா 297 பழங்கால பொருட்களை இந்தியாவிற்கு திரும்ப ஒப்படைத்ததற்கான நிகழ்வு நடைபெற்றது. இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த ஜூலை மாதம் கையெழுத்தான கலாசார சொத்து பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை நடைபெற்றது. பிரதமர் மோடி, இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி கூறினார். இதுவரை, 2014-ம் ஆண்டு முதல், 640 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் 578 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.