2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இரண்டு விண்கல ஏவுதல்களில் ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு 630,000 டாலர் அபராதம் விதிக்க அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் - FAA திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் PSN SATRIA மற்றும் ஜூலை மாதம் ஜூபிடர் 3 என்ற இரண்டு செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் ஏவியது. ஆனால் இந்த ஏவுதல்களுக்கு முன்பு, FAA நிறுவனம் கோரியிருந்த புதிய ஏவுதள கட்டுப்பாட்டு அறை மற்றும் உந்துவிசை பண்ணை போன்ற அடிப்படை வசதிகளை ஸ்பேஸ்எக்ஸ் ஏற்படுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். FAA நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை அதிகாரத்தை மீறிய செயல் என்றும், இது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், FAA நிறுவனத்தின் மெதுவான ஒழுங்குமுறை செயல்முறையையும் அவர் விமர்சித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விரைவில் நீதிமன்றத்தை அணுகும் என தெரிகிறது.